சமூக சீரழிவை கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்று வக்கிரமாக எழுதிய “இந்தியா டுடே”வை செருப்பால் அடிப்போம் என்று தோழர் எழுத்தாளர் பாமரன் குறுந்தகவல் அனுப்பி இருந்தார். 
அவருடைய கோபத்திற்கு காரணமான “இந்தியா டுடே” இதழ், மறைந்த வி.பி.சிங் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலியை வாசகர்களுக்காக கீழே தருகிறேன்.
அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008
மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.
அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.
பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.
அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.
அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.
அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.
-எஸ். பி.
இந்த அஞ்சலியை பார்த்தவுடன் உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார்கள் என்ற ஆச்சரிய உணர்வே மேலோங்கியது.
மாமனிதர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல் படுத்தியதன்மூலம் பார்ப்பனிய/பனியா என்ற ஆதிக்க சமூகங்களில் மிகப்பெரும் சீரழிவை ஏற்படுத்தினார் என்பதை யார்தான் மறுக்க முடியும்.
மனுதர்மத்தின் துணை கொண்டு இந்தியாவின் அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருந்தவர்களை, மக்கள் நலம் சார்ந்து – அனைத்து சமூகத்தவர்களும் இந்திய அரசியலின் அனைத்து தளங்களிலும் பங்குபெற செய்வதன்மூலம் – சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொன்னது நிஜம்தானே? 
பல நூற்றாண்டுகளாய் இந்து மதத்திலும், இந்து மதத்தின் தாக்கம் பெற்ற மற்ற மதங்களிலும் சமூகத்தின் கடைசி கட்டுமானத்தில் பிறந்து உயிருடன் எரிக்கப்பட்டவர்களுக்கும், ஜீவசமாதி அடைந்தவர்களுக்கும் சாந்தி செய்யும்விதமாக அவர்களின் சந்ததிகள் வாழ வழிகாட்டியபோது, பன்னெடுங்காலமாக பிறவி ஒன்றையே தகுதியாகவும், திறமையாகவும் கொண்டாடி ஆதிக்கம் செலுத்தியவர்கள் சற்று வீழ்த்தப்பட்டது உண்மைதானே?
அதுவரை ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் எதிரியாக இருந்தவர்களை புரிந்து கொள்ளாமல், தெய்வத்தின் குரல் எழுதிய தெய்வத்தின் வாரிசு தெய்வங்களை நம்பி தம்முள்ளேயே அடித்துக்கொண்டு கிடந்தவர்களை – பொது எதிரியை அடையாளம் காட்டியதன்மூலம் ஒற்றுமைப்படுத்தி, சாமானிய மனிதர்களுக்கும், தெய்வப்பிறவிகளுக்கும் இடையை பிளவை ஏற்படு்ததி தெய்வங்களுக்கு மோசமான நிலையை திரு.வி.பி.சிங் ஏற்படுத்தியது வாஸ்தவம்தானே?
திரு.பி.பி. மண்டல் 1980ம் ஆண்டிலேயே அப்போதைய உள்துறை அமைச்சர் திரு.ஜெயில் சிங்கிடம் வழங்கிய அறிக்கையை பத்து ஆண்டுகள் கழித்தும் மறந்துவிடாமல் தூசிதட்டி எடுத்து, அமல் படுத்தி சாமானிய மக்களுக்கு திரு.வி.பி.சிங் வாழ்வு அளித்தது உண்மைதானே?
போரில் உயிரிழக்கும் ராணுவப்படையினருக்கு சவப்பெட்டியைக்கூட உள்நாட்டில் தயாரிக்க வக்கின்றி வெளிநாட்டில் வாங்கி, அதை வாங்குவதில்கூட ஊழல் புரியும் நாட்டில், அரசியல் எதிரிகள்கூட விமர்சனம் செய்ய வழியின்றி வி.பி.சிங் வாழ்ந்து மறைந்தது சிறப்பானதுதானே?
பதவி வெறி பிடித்து மகாபாரதத்தையும் மிஞ்சும் அரசியல் சூழ்ச்சிகள் நடைபெறும் நாட்டில் தனக்கான பணி முடிந்தது என்று பதவிக்கு அலையாமல் சமூகப்பணியும், இலக்கியச்சுவையும் போதும் என்று முடிவெடுத்தது பெருமைதானே?
இது அனைத்தும் தெரிந்த “இந்தியா டுடே” இதழ், அதற்கே உரிய பாணியில் அஞ்சலி செலுத்தியது. என்ன, அந்த இதழின் உரிமையாளர்களும், அவர்களின் உறவினர்களும் சமூகத்தின் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை தகர்த்த மனிதரைப்பற்றி நினைக்கும்போதே இயல்பாக வரும் வயிற்றெரிச்சல் சற்று அவர்களின் கட்டுப்பாட்டை தளர்த்தி அவர்களின் சுயமுகத்தை காட்டிவிட்டது, அவ்வளவுதான். 
இந்தியா டுடே இதழின் தரம் குறித்து அனைவருக்குமே தெரிந்திருக்கும். அவ்வபோது பாலச்சந்தர் திரைப்பட பாணியில் கருத்துக்கணிப்பு நடத்தி விற்பனையை தக்க வைத்துக் கொள்வதும், அதன்மூலம் போலி மருத்துவக்கல்வி நிறுவனங்களுக்கு விளம்பரம் வெளியிட்டு பொருளீட்டுவதும் அதற்கு புதிதல்ல.
**********
341 நாட்கள் பதவியிலிருந்த வி.பி.சிங் நாத்திகர் அல்ல. ஆனாலும் மதம் என்பதை அரசியலோடு இணைத்துப்பார்க்க மறுத்தவர்.
எனவேதான் அயோத்தியில் கரசேவை செய்வதற்காக பாரதிய ஜனதாவும், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளும் ரதயாத்திரை சென்றபோது ராணுவத்தை வைத்து அடக்கினார். அதன் விளைவாக பதவியை இழந்தார். அப்போதும் அவர் கம்பீரமாக சொன்னார்:
ஆம்... நான் தோற்கடிக்கப்பட்டுவிட்டேன். ஆனாலும், பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் செயல்தி்ட்டத்தில் சேர்த்த பின்னர்...!
அரச குடும்பத்தில் பிறந்தாலும் சாமானிய மக்கள் மீது பேரன்பு கொண்டவராக விளங்கிய வி.பி.சிங் அரசியலிலிருந்து விலகினாலும், சமூகத்தோடு தொடர்புடையவராகவே இருந்தார். நாட்டில் பயங்கரவாதம் பெருகிவருவதாக அவரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறினார்: “உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்... சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்... லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். ஆனால்... “உனது விலை பொருளுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால், நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். ஆனால், அதற்கு என் உடல்நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”
பின்குறிப்பு: இதைப்படித்த பிறகும் இந்தியா டுடே-வை செருப்பால் அடித்தே தீருவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு ஒரு தகவல். இந்த தலையங்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழி பெயர்ப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டபோதே சென்னை அலுவலகத்தில் இந்த இரங்கலுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வரும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும் டெல்லி தலைமையகம் தனது "கொள்கை முடிவி"ல் உறுதியாக இருந்துள்ளது. எனவே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க விரும்புபவர்களுக்கு வசதியாக டெல்லி அலுவலக முகவரி, இதோ:
Prabhu Chawla,
Editor,
India Today & Group Editorial Director,
F-14/15, Connaught Place,
New Delhi 110 001.
Tel: 011-23315801-04 (board).
மின்னஞ்சல்: RATNAM@intoday.com
Vannakam Sir,
ReplyDeleteonly few of % of people in our country they make all the false information about lower cast people welfer only they worry they are not have own land in india.
thanks for your article and I sent mail the above said address for their false statement.
siva.
I dont agree with the article as it does not expose V.P.Singh in the right way. He used Mandal to consolidate his position.He did not prevent Advani's Rath Yatra in the beginning.
ReplyDeleteHe was a loyalist to India Gandhi family and
owed his raise to Sanjay Gandhi.Mandal resulted in giving a boost to caste politics. He talked so much about Bofors and ended up supporting
corrupt politicians.He tried to balance between competing interests when he was P.M. He pleased BJP by appointing Jag Mohan as governor of J&K.
He toed the party line in Sha Bano controversy
and proved that he was a pseudo-secularist.He is
not a corrupt politician, nor did he try to become a P.M again. You should read Krishna Ananth's article on V.P. Singh in EPW.An article that shatters myths about V.P.Singh.
மத்திய அரசு வேலைகளில் பிற்பட்டோருக்கான 27 % இட ஒதுக்கீட்டில் உச்ச நீதி மன்ற ஆணைபடி, கிரிமி லேயர்கள் கழிக்கப்பட்டு வருகிறது. மிக அருமையான செயல். பார்க்க :
ReplyDeletehttp://ncbc.nic.in/html/creamylayer.htm
இதே போன்ற நீதி தமிழகத்திலும் இதர மானிலங்களிலும் வரும் காலத்தை எதிர்னோகுகிறேன். அனைத்து இடங்களிலுன் கிரிமி லெயர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது. வரட்டம் அந்த பொன்னாள். பிறகு இட ஒதுக்கீட்டின் அளவு பற்றி விவாதம் தொடங்கும். திரு.கீ.வீரமணி அவர்களுக்கு நான் பல ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய ஒரு மின்மடல் : பார்க்க :
http://athiyaman.blogspot.com/2006/01/reg-creamy-layer-misusing-reservation.html
நானும் என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..
ReplyDeleteஅண்ணா..
எதிர்ப்பைக் காட்டுவோம். கண்டனக் குரல் எழுப்புவோம்..
ஆனால் செருப்பு, அது, இது என்று வேண்டாமேண்ணா..? நமக்கென்று சில தகுதிகள் உண்டல்லவா..?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ReplyDeleteமேலே உள்ள கருத்துரையை வலைபதிவு நிர்வாகி நீக்கவில்லை. எந்த கருத்துரையும் நீக்கப்படாது. அந்த கருத்துரைக்கு, அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள்.
ReplyDelete//அனைத்து இடங்களிலுன் கிரிமி லெயர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது. வரட்டம் அந்த பொன்னாள். //
ReplyDeleteஅது சரி அதியமான் அவர்களே.
அப்படி என்றால் இடப்பங்கீடு வேண்டும் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா
இத்தகைய கொடூரமான கட்டுரையை எழுதியதன் மூலம் , சாமான்ய மக்களின் உணர்வுகளை வெகுஜனப் பத்திரிக்கைகள் கண்டு கொள்வதே இல்லை என்பது மீண்டும் நீருபனமாகியிருக்கிறது.....
ReplyDeleteஇவர்களின் புரட்டுக்களை உடைத்தெறிவோம்......உங்கள் அனுமதியிருந்தால் இதே கட்டுரையை என் பதிவிலும் மீளாக்கம் செய்ய விருப்பம் ....அதிக மக்களை சென்றடையுமல்லவா?
நானும் என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..
ReplyDeleteஅண்ணா..
எதிர்ப்பைக் காட்டுவோம். கண்டனக் குரல் எழுப்புவோம்..
ஆனால் செருப்பு, அது, இது என்று வேண்டாமேண்ணா..? நமக்கென்று சில தகுதிகள் உண்டல்லவா..?///
இறந்த ஒரு தலைவனை சமூகத்தை சீரழித்தவன் என்று பட்டம் கட்டுவது மட்டும் தகுதிக்கு உட்பட்டதா உண்மைத் தமிழன் அவர்களே???
நானும் என் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..
ReplyDeleteஎனது கடும் கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்..
ReplyDeleteThis article shows that still social rights are been killed and it says some brammins dominations are in our society
ReplyDeleteand once again india today publishers
shows thier true and thier own&real colour
Ramkumar Muthurangam
Its a planned brutal act, by India Today.I strongly condemned this.VP Singh is one of the few statesman in Indian politics, who has concern over India and its Gross roots.We should express our concern, by forwarding this article to our friends.
ReplyDeleteஇந்தியா டுடேவிற்க்கு என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்...
ReplyDeleteவிடுங்க சார்...காசு கொடுத்த அவனுங்க கழுதை ஜெயிக்கும் கருத்து கணிப்பு வெளியிடுவானுங்க....
உண்மைத்தமிழன் போன்ற மிதவாதிகளுக்கு விவேகானந்தரின் வரிகளையே பதிலாகத் தர விரும்பிகிறேன்:-
ReplyDelete'ஏழையின் கண்ணில் நீர் வழிந்தால் எவருடைய நெஞ்சில் உதிரம் கொட்டுகிறதோ, அவரே உண்மையான மனிதன்' என்றார்.
மேலும் இளைய சமுதாயத்துக்கு அவர் சொன்ன அழுத்தமான வார்த்தை:
"உனக்கு கனவுகள் வேண்டாம்; வாழ்கையை பூஞ்சோலையாய் எண்ணும் உனது மனப்பான்மையை விட்டொழி. வாழ்கையை ஒரு போர்களமாகக் கருது. ஆற்றல் உனது உடலெங்கும் பரவட்டும்; உயிர்சக்தி உனது நாடி நரம்புகளில் பொங்கி வழியட்டும். இரும்புத் தசைகளும் எஃகு நரம்புகளும் உனக்கு வாய்க்கட்டும். இடியோசைபோல் உனது குரல் முழங்கட்டும். கீதை படிப்பதை விட, கால் பந்து விளையாடுவதில் கவனம் செலுத்து. மெல்லிசையில் மனதைப் பரிகொடுக்காதே; மாறாக, தாரை தப்பட்டைகளின் பெரு முழக்கத்தை கேள் செம்மறியாட்டுதனத்தை உதறித்தள்ளு; சிங்கம் போல பொங்கி எழு"
என்னும் பெங்காளத் தோழனின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுங்கள் உண்மைத் தமிழரே !
கைலாஷ் - ஹைதராபாத்
please change your font color. It is very diffcult to read.
ReplyDeleteஇந்தியா டுடேவிற்க்கு என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்...
ReplyDeleteஎதிர்ப்பைக் காட்டுவோம். கண்டனக் குரல் எழுப்புவோம்..
ReplyDeleteI condemn 'India Today' for this atrocious article
ReplyDelete- ragu
இந்தியா டுடேவிற்க்கு என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்
ReplyDelete// He used Mandal to consolidate his position.He did not prevent Advani's Rath Yatra in the beginning.//
ReplyDeleteFacts of history, however, do not corroborate this view. For, V.P. Singh had taken the lead to implement the Mandal report when he was the Chief Minister of Uttar Pradesh. There was little doubt that he was convinced about the historical necessity to implement the report. In all probability, he would have implemented it at greater leisure if the rath yatra had not been launched. The Advani yatra divested V.P. Singh of the leisure and perhaps a more organised and structured pace of implementation.
http://flonnet.com/stories/20081219252512400.htm
இவர்களுக்கு வி பி சிங் வைத்த ஆப்பை இன்னும் இறுக்கமாக இறக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
ReplyDeleteகருத்துரை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ReplyDeleteசமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம் &
வி.பி சிங்கை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட பார்ப்பன “இந்தியா டுடே”விற்கு கண்டனக் கூட்டம்
நினைவுகளைப் பகிர்வோர்:
விடுதலை இராசேந்திரன்
இரா.அதியமான்
அ.மார்க்ஸ்
ஞாநி
ஆதவன் தீட்சண்யா
ஓவியா
அழகிய பெரியவன்
நாள்: டிசம்பர் 14, 2008, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணி
இடம்: புக் பாயின்ட் அரங்கம், ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில், அண்ணா சாலை, சென்னை
நமது ஒளிக்காகத் தன்னைக் கரைத்துக் கொண்ட ஓர் உயிருக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் வாருங்கள்!!
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கீற்று.காம் (www.keetru.com)
பிழைப்புவாதி பாமரனின் சந்தர்ப்பவாதம்!!!
ReplyDeleteபார்ப்பன / இந்து பயங்கரவாதத்தை கடைவிரிக்கும் பத்திரிக்கையான இந்தியா டுடே மீதான விமர்சனங்களும் எதிர்விணைகளும் இன்னும் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும். அதிலும் இடஒதுக்கீடு குறித்து வி.பி.சிங் மீதான தமது விமர்சனத்தின் மூலம் பார்ப்பன வெறியை துல்லியமாக பதிவிட்டிருக்கும் அந்த மஞ்சள் பத்திரிக்கையினை தடை செய்யவும் ஒருங்கிணைந்த போராட்டங்கள் அவசியம் என்பதும் உண்மையே.
"இந்தியா டுடே வை செருப்பால் அடி" என்கிற முழக்கத்தை இப்போது உச்சரித்திருப்பது பாமரனின் வாய் என்பதால் இதனை வேறொரு கோணத்திலும் பார்க்கவேண்டியுள்ளது. சண்டே இந்தியன் என்கிற பத்திரிக்கை இடஒதுக்கீட்டுக்கு எதிரான சிறப்பு மலரே கொண்டுவந்து வெளியிட்டிருந்தபோது எந்த எதிர்ப்பும் காட்டாது 'அவையடக்கத்துடன்' நடந்து கொண்ட பாமரன், குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பார்ப்பன ஏடுகளில் இடஒதுக்கீட்டைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட எதற்கும் பொங்கிவெடிக்காத பாமரனுக்கு இப்போது இந்தியாடுடேவின் மீது மட்டும் ரோசம் பொங்குகிறது என்றால் அதற்கான காரணத்தை நம்மால் சகித்துக் கொண்டிருக்கவில்லை.
பார்ப்பன பத்திரிக்கைகளில் எழுதுகிற வாய்ப்பைப் பெறுவதற்காக பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்ட பாமரனுக்கு இந்தியாடுடே பத்திரிக்கையில் எழுதுவதற்கான வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை என்பதுதான் அவரது இந்த திடீர் ரோசத்துக்கு காரணமாக இருக்கிறது. தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்வதற்காக சினிமாக் கழிசடைகளுடன் கொஞ்சிக் குலாவும் இந்த சந்தர்ப்பவாதிக்கு இருக்கும் சமூகப் பொறுப்புணர்வு பற்றி நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம்.
இப்படியிருக்க தனக்கு எழுத வாய்ப்பளிக்கும் பத்திரிக்கைகள் செய்யும் தவறை மூடிமறைப்பதும் அதுகுறித்து கண்டும் காணாமல் இருந்துவிட்டு அதே தவறை தனக்கு எழுத வாய்ப்பளிக்காத பத்திரிக்கை செய்யும்போது மட்டும் எகிறிக் குதிப்பது கேவலமான பிழைப்புவாதமன்றி வேரென்ன?
பாமரனின் சீடனாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் யுவன்பிரபாகரன் என்பவர் இங்கே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை தேசிய அடையாளம் காட்டி கீழ்த்தரமாக விமர்சித்தது இதே அரங்கத்தில் வேரொரு இழையில் காட்சிக்கு இருக்கிறது. அம்பேத்கரை 'இந்து தேசிய வாதி' என்று அடையாளப்படுத்தி விமர்சிக்கும் அந்நபர் அதேநாள் வேரொரு இழையில் வி.பி.சிங் நினைவு கருத்தரங்கத்துக்கு அனைவருக்கும் அழைப்புவிடுத்திருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். வி.பி.சிங் என்ன தமிழ்த் தேசியத்திற்காக போராடியவரா? அம்பேத்கரை தேசியச் சிக்கலில் அடைக்கத்துடிக்கும் இவர்களின் தேசிய உணர்வு வி.பி.சிங் விசயத்தில் அம்பலமானது போல்தான் இந்தியாடுடேயை எதிர்ப்பதன் மூலம் பாமரனின் சந்தர்ப்ப வாதத்தையும் அம்பலப்படுத்துகிறது.
பிழைப்புவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் மட்டுமே தமது அரசியலாகக் கொண்டிருக்கும் இந்த பாமரன் தலைமையிலான கும்பல், தமது தனிப்பட்ட காழ்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்காக அக்கும்பலை நாம் எதால் அடிப்பது?
இரணியன்.
eraniyann@gmail.com
இனி இந்தியா டுடேயில் எழுதமாட்டோம்,வாங்க
ReplyDeleteமாட்டோம் அப்படின்னு இந்தக் கூட்டத்தில
பேசறவங்க உறுதிமொழி தருவாங்களா?
திட்ட ஒரு மேடை, எழுத இந்தியா டுடேயும்
இன்னொரு மேடைன்னு பிழைப்பை கவனிப்பாங்களா?
மான உணர்வோடு “இந்தியா டுடே” என்ற பார்ப்பன- பார்ப்பனிய ஏட்டை முடக்க அனைவரும் செயலாற்றுவோம்.
ReplyDeleteஇந்திய டுடேயை செருப்பால் அடிக்க வேண்டுமாயின் பல காரணங்களும், சந்தர்ப்பங்களும் உண்டு.
ReplyDeleteவாஸந்தியின் கட்டுரைகள் ஈழத் தமிழர்களை கொடிய விலங்குகளாகச் சித்தரித்தது.
வி.பி சிங் 27% ஒதுக்கீடு இந்திய சமூகத்திற்கு சுதந்திரமடைந்தபோதே செய்திருக்க வேண்டியது.
சுதந்திரத்தை ஒதுக்கப்பட்ட மக்கள் அனுபவிக்க நேரு தவறிவிட்டார்.
குறுகிய காலப் பதவியில் அவரது செயல் நீண்ட கால ஒடுக்குமுறைக்கு நல்ல தீர்வைத் தந்திருக்கின்றது.
ஒரு ஈழத்துத் தமிழன்
பார்ப்பன பத்திரிக்கைகள் பார்ப்பனரல்லாதாரைப் பற்றி கொச்சைப்படுத்தி எழுதுவதே வாடிக்கையாகிவிட்டது.
ReplyDeleteபார்ப்பன பத்திரிக்கைகளை காசு கொடுத்து வாங்குவதில்லை என்ற முடிவை ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் உறுதி எடுத்துக் கொண்டு அதன்படி நடந்தால் மட்டுமே அவர்களின் கொட்டம் அடங்கும்.
செய்வீர்களா? செய்யவேண்டும்.
நன்றி.
//பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.//
ReplyDeleteதியாகம் தடுக்கப்பட்டது என்று இந்தியா டுடே கூறுகிறது, என்றால் அவர் அந்த போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும் என்று அந்த பத்திரிகை தன் வக்கிர எண்ணத்தை வெளிப்படுத்துகிறதா?
அவ்வாறெனில் கட்டுரையை எழுதியவர் மீதும், பத்திரிகை ஆசிரியர் மீதும் - மக்களிடையே தற்கொலையை புனிதப்படுத்தி, அதை செய்துகொள்ள தூண்டுவதாக வழக்கிட்டால் என்ன?
பத்திரிகை அனாதையான இந்தியா டுடே அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு விளம்பரம் தேடுவது ஒன்றும் புதிதல்ல.
//அவ்வையார் சொன்னது…
ReplyDelete//அனைத்து இடங்களிலுன் கிரிமி லெயர்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது. வரட்டம் அந்த பொன்னாள். //
அது சரி அதியமான் அவர்களே.
அப்படி என்றால் இடப்பங்கீடு வேண்டும் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா
////
yes. but creamy layers should be excluded at all levels. only then real social justice will be delivered. pls read my mail to Ki.Veeranamni..
வி.பி சிங் போன்ற நல்ல மனிதர்களை நாம் இழந்துவிட்ட துயரத்தில் இருக்கும் நேரத்தில் இந்தியா டுடேயின் கீழ் தரமான செயல் மிகவும் கண்டிக்கதக்கது.
ReplyDelete//வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.//
ReplyDeleteசமூக அடுக்குமுறை என்றால் வர்ணாசிரம அ-தர்மப்படியான அடுக்குமுறையை சொல்கிறதா இந்தியா டுடே?
மேல்சாதியில் பிறந்தவர்கள் ஆண்டுகொண்டும், மற்றவர்கள் அடிமைகளாகவும் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறதா இந்தியா டுடே?
ஆமெனில் இந்தியா டுடே-க்கு செருப்படி மட்டும் போதுமா?
டோண்டு எங்கே? பதில் கூறாமல் ஒளித்துக்கிடக்காமல் கருத்துக்கூற வா!
ReplyDeleteபாமரன் தான் ஒன்றும் புடுங்கவில்லை
ReplyDeleteஇரணியன் என்ற முற்ப்போக்கு முகமூடியும் அவனை ஏவிவிட்டு கொண்டு இருக்கும் மதிமாறன் என்ற ஒரு ஜோசியக்கார பத்திரிக்கையில் வேலை செய்த அந்த முற்ப்போக்கு முகமூடியும் சண்டே இந்தியன் இட ஒதுக்கீடு மலர் வந்தபோது அப்போது என்ன புடிங்கினார்கள் என்றால் சொன்னால் சும்மா அடிக்கலாமா அல்லது எதையாவது தொட்டு அடிக்கலாமா என்று முடிவு செய்யலாம்
இந்த ரணியனே ஒரு மயிலாப்பூர் பார்ப்பான் தான்
ReplyDeleteஅங்காங்கே வலைபூக்களிலும், ஆர்குட் குழுமங்களிலும்
அறிவழகன் (tamilarivu.wordpress) போன்றோர் இவன் முகமுடியை கிழித்து ஓடவிட்டனர்
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத ஜந்து தான் அது முழுக்க முழுக்க மதிமாறனின் வாந்தி தான் அது
அன்பு நண்பர்களுக்கு,
ReplyDeleteபொது எதிரியை அடையாளம் கண்டறிந்து போராடிய வேண்டிய தருணத்தில், நமக்குள்ளே உள்ள சிறுசிறு கருத்து வேற்றுமைகளை பெரிதுபடுத்தி ஒருவரை ஒருவர் கீழ்த்தரமாக தாக்கிக்கொள்வதன்மூலம் பொது எதிரிக்கு மறைமுகமாக உதவி செய்கிறோம்.
இது தேவைதானா? சிந்திப்பீர்! செயல்படுவீர்!!
“இந்தியா டுடே”-விற்கு எதிரான கருத்தை பதிவு செய்வதை விட்டுவிட்டு பிற பதிவர்களை வசைபாடுவது அழகல்ல. பிற பதிவர்கள் மீது குற்றம் சாட்டுவதில் ஆர்வமாக உள்ளவர்கள் அவர்களை எதிர்த்து தனியாக பதிவு வெளியிடவும். அதற்கு அவர்கள் பதில் சொல்வார்கள்.
ReplyDeleteஇந்தியா டுடேவின் கருத்து தங்களுக்கு ஏற்புடையதா? இல்லையா? அதை பற்றி மட்டும் எழுத்தினால் நல்லது.
ஒரு மனிதர் மரணமடைந்த பின் அவரது குற்றங்களைக் கூட நளினமாக மிருதுவாக அவரை மதிப்பவர்கள் புண்படும்படாமல் சொல்வதுதான் மனித மாண்பு.தனி மனிதனுக்கே இத்தகைய பண்பு இருக்கிறபபோது ஒரு சமூகத்தை பிரதிபலிக்கவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டிய ஒரு பத்திரிகை திரு.வி.பி.சிங்குக்கு 'அழுதிருக்கும்" அஞ்சலி அதன் நெஞ்சு சளியைக் காட்டுகிறது.
ReplyDeleteஅந்த மாமனிதர் உயிருடன் இருக்கும்போது இந்த விமர்சனங்களை இவ்வளவு வெளிப்படையாக வைக்காத அந்த டுடேயின் பூணுல் புத்தியை எண்ணி சிரிக்கலாம். காரித்துப்பிக் கொண்டே சிரிக்கலாம். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனையோ பேரின் கால்பிடிக்கும் அரசியல் உலகில் ரத்தயாத்திரையை தடுத்து நிறுத்தியதற்காக பதவியைத் துறந்த வி.பி.சிங்கின் சாதனை மகுடம்தான் மண்டல் கமிஷன் அமல். இது தெரிந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தா ங்கள் தரித்திந்த பீதாம்பரத்தில் சற்று கிழித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கொடுத்ததை தாங்க முடியாமல் 'மனுமென்டல்கள்" போடும் கூச்சலின் குறிப்புதான் டுடேவின் அலறல்.
ஒரு மனிதர் மரணமடைந்த பின் அவரது குற்றங்களைக் கூட நளினமாக மிருதுவாக அவரை மதிப்பவர்கள் புண்படும்படாமல் சொல்வதுதான் மனித மாண்பு.தனி மனிதனுக்கே இத்தகைய பண்பு இருக்கிறபபோது ஒரு சமூகத்தை பிரதிபலிக்கவேண்டிய பொறுப்பு இருக்கவேண்டிய ஒரு பத்திரிகை திரு.வி.பி.சிங்குக்கு 'அழுதிருக்கும்" அஞ்சலி அதன் நெஞ்சு சளியைக் காட்டுகிறது.
ReplyDeleteஅந்த மாமனிதர் உயிருடன் இருக்கும்போது இந்த விமர்சனங்களை இவ்வளவு வெளிப்படையாக வைக்காத அந்த டுடேயின் பூணுல் புத்தியை எண்ணி சிரிக்கலாம். காரித்துப்பிக் கொண்டே சிரிக்கலாம். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனையோ பேரின் கால்பிடிக்கும் அரசியல் உலகில் ரத்தயாத்திரையை தடுத்து நிறுத்தியதற்காக பதவியைத் துறந்த வி.பி.சிங்கின் சாதனை மகுடம்தான் மண்டல் கமிஷன் அமல். இது தெரிந்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தா ங்கள் தரித்திந்த பீதாம்பரத்தில் சற்று கிழித்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கொடுத்ததை தாங்க முடியாமல் 'மனுமென்டல்கள்" போடும் கூச்சலின் குறிப்புதான் டுடேவின் அலறல்.
I strongly condemn India Today for that article.
ReplyDeleteநல்ல விரிவான அலசல். படங்களையும் போட்டு அசத்தலாகத் தந்துள்ளீர்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
மிக்க நன்றி. ஒப்பற்ற தலைவர்களின் ஒருவரான வி.பி.சிங் பற்றி அறியவைத்தற்கு..வர்த்தக வலையம் பற்றி அப்போதே தெளிவாக விளங்கி வதை்துள்ள மனிதர். இன்னும் எம் மக்களுக்கு இதைப்பற்றி விளங்கவில்லை. வருத்தத்திற்குரிய விடயம்.
ReplyDelete